பொள்ளாச்சியை அதிர வைத்த இன்னொரு சம்பவம் – யாரந்த யமுனா?

441

பொள்ளாச்சி (30 ஆக 2021): 17 வயது சிறுவனை 19 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது. அதே பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார்.

ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த யமுனாவுக்கும், அந்த சிறுவனருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி யமுனா, சிறுவனை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு அழைத்து போய்விட்டார். அங்கு அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்துள்ளார்.

அதற்கு பிறகு சிறுவனை, கோவை செம்மேடு பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கிருந்த ஒரு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அப்போது, யமுனா, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறுவனின் பெற்றோர், மகனை காணாமல் எங்கெங்கோ தேடி உள்ளனர்.. இறுதியில் அந்த சிறுவனே வீடு வந்து சேர்ந்துள்ளான்.. நடந்ததை எல்லாம் பெற்றோரிடம் சொல்லவும், அதிர்ந்து போன பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்கள்.. பின்னர், யமுனாவிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போதுதான், சிறுவனை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து யமுனா கைதாகி உள்ளார். முதல்முறையாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் ஏற்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.