பாஜகவால் காலூன்ற முடியாது – ராகுலுக்கு அண்ணாமலை பதில்!

சென்னை (03 பிப் 2022): தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’ என்று ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரலாற்றை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும், இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கும் காங்கிரஸே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் உன்னத நோக்கத்தை புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்பதாகவும், விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமரும் எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு!

டெஹ்ரான் (05 டிச 2022): ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9...

மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக - ஆந்திரா...

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

சென்னை (07 டிச 2022): அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில் மாவட்டச் செயலாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில்...