வசமாக சிக்கிக் கொண்ட அண்ணாமலை – பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு மழுப்பல் பதில்!

1309

சென்னை (27 அக் 2021): வாயை கொடுத்து பெறும் நிறுவனத்திடம் வசமாக சிக்கிக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டுமே என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  குன்னூரில் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - 7 க்கும் மேற்பட்டோர் பலி!

இந்நிலையில் இது தொடர்பாக பி.ஜி.ஆர். நிறுவனம் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீஸில், ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “எனக்கு 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்” என்று தெரிவித்துள்ளார்.