தமிழகத்தில் ஹிஜாபுக்கு தடை – பாஜக அண்ணாமலை!

Share this News:

குன்னூர் (15 பிப் 2022): தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குன்னூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:

“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும். பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம். ஆனால் பள்ளி கல்லூரிகளில் எந்த மதமாக இருந்தாலும் கட்டாயம் அந்த சீருடை மட்டுமே அணிய வேண்டும். மதத்தை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்யாது. இஸ்லாமியர்களாகட்டும் கிறிஸ்தவர்களாட்டும் யாராக இருந்தாலும் அருகில் வைத்துக் கொள்வோம்.

மேற்கு வங்க கவர்னர் சட்டமன்றத்தை ஒத்திவைத்த விவகாரத்தை எதிர்த்து தமிழக முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் கவர்னர் இரக்கமில்லாமல் தவறு செய்வதாகவும், மாநில அரசியலில் தலையீடு செய்வதாகவும் முதல்வர் குற்றம் சாட்டி இருந்தார். மாநில அரசும், மினிஸ்ட்ரி ஆப் கவுன்சில் எடுக்கும் முடிவையே கவர்னர் எடுத்துள்ளார் என்ற புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு தமிழக முதல்வர் ஏன் ட்விட்டரில் பதிவிட வேண்டும்?

இதுபோன்று மத்திய அரசை வம்புக்கு இழுக்கும் தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாகத் தெரியவில்லை. இதற்காக தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்


Share this News:

Leave a Reply