மாநாடு திரைப்படம் – பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!

சென்னை (28 நவ 2021): மாநாடு திரைப்படம் குறித்து வேலூர் இப்ராஹீம் கருத்து தெரிவித்துள்ளதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால் அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போது அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கிறது.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் குறித்தும் விமர்சனம் எழும்பியது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியானது. வன்முறையை தூண்டும் மாநாடு படத்தை தடைசெய்ய வேண்டும் என பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுகையில் ‘‘திரைப்படத்துறை விமர்சனங்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்து நம் கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எதற்காக பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்’’ என்றார்.

ஹாட் நியூஸ்:

55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி...

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...