தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடைசிநாளான நேற்று முன் தினம் குண்டம் திருவிழா நடைபெற்றது.

இதற்காக மசூதியின் எதிரே விறகுகள் அடுக்கி தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து கோயில் பூசாரி குண்டத்தில் இறங்கினார். இதில் தமிழக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

மசூதி அருகே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்து முஸ்லிம் மக்கள் எந்தவித சலனமும் இன்றி கண்டு களித்தனர். இது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஹாட் நியூஸ்:

நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட பொதுமக்கள் போலீஸ் தடியடி – VIRAL VIDEO

ஜார்கண்ட் (09 டிச 2022): பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று ஜார்க்கண்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்...

துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 15 ல் தொடக்கம்!

துபாய் (06 டிச 2022): துபாய் ஷாப்பிங் திருவிழா இம்மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. ஷாப்பிங் திருவிழாவை ஒட்டி, இம்முறையும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன துபாய் ஷாப்பிங் திருவிழா ஜனவரி 15 முதல் ஜனவரி 29...

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து...