திமுகவில் இணையும் அன்வர்ராஜா – அதிர்ச்சியில் எடப்பாடி!

ராமநாதபுரம் (04 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்பியும் சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர்ராஜா திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பாஜகவுடன் இணைந்துகொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் துணை போகிறது. இது அதிமுகவில் உள்ள முஸ்லிம்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததற்கு அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கும் குடியுரிமை சட்ட ஆதரவே காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இனியும் அ.தி.மு.க.வில் இருப்பது சரியில்லை என்கிற முடிவுக்கு வந்த அன்வர், தி.மு.க.வுக்குப் போகலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் என்கின்றனர். இது தி.மு.க. தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. காரணம் அன்வர்ராஜாவும் அதிமுகவை விட்டு விலகிவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் அதிமுகவை விட்டு விலக நேரிடும் என்பதேயாகும்.

இதற்கிடையே அன்வர்ராஜாவை இணைத்துக் கொள்வது பற்றி திமுக தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்: