நான் வழிபடும் இஸ்லாத்தில் உறுதியாகவே இருக்கிறேன்: ஏ.ஆர். ரஹ்மான்

Share this News:

சென்னை (06 ஜன 2021): வலிமிகுந்த கடந்த காலத்தை தங்கள் வலிமையால் வென்ற பல கலைஞர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆஸ்கார் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை உலகில் இந்தியாவை உலக வரைபடத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு மேதை. இருப்பினும், இசையின் எல்லைக்கு அப்பால் அவர் இஸ்லாத்திற்கு மாறியது ஏன் என்பது இன்னும் விவாதத்தில் உள்ளது.

இசை சக்கரவத்தியான ஏ.ஆர்.ரஹ்மானின் அவரது 56 வது பிறந்தநாளான இன்று இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் , அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து திறந்த மனதுடன் பதிலளித்துள்ளார்.

ரஹ்மானின் தந்தையும் இசை இயக்குநருமான ஆர்.கே. சேகர் இறந்த பிறகு ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். திலீப் என்ற பெயர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது ரோஜா ரோஜா திரைப்படத்தின் போஸ்டரில் கடைசி நிமிடத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்று சேர்க்கப்பட்டதாக . ‘நோட்ஸ் ஆஃப் எ ட்ரீம்’ இல், ரஹ்மானின் தாயார் கரிமா பேகம் கூறியதை நினைவு கூர்ந்தார்.

மேலும் அவர் கூறுகையில், “மதம் என்பது திணிக்கப்படக்கூடிய ஒன்றல்ல, இது மிகவும் தனிப்பட்ட விஷயம்.” என்று கூறினார். “நீங்கள் எதையும் திணிக்க முடியாது. நீங்கள் விரும்புவதால் , உங்கள் பிள்ளைகளிடம் உங்கள் விருப்பத்தை திணிக்க முடியாது. கல்வியில் பொருளாதாரம் அல்லது அறிவியலை தேர்வு செயும்படி தனது பிள்ளைகளை கட்டாயப்படுத்துவது சரியல்ல. அது அவர்களின் விருப்பம்.” என்கிறார்

மதம் மாறுவது குறித்து ரஹ்மானின் பதில் அது முற்றிலும் தனிப்பட்டது. இஸ்லாத்திற்கு மாறுவது ஒரு விஷயமல்ல, இஸ்லாத்தின் சாராம்சம் உங்கள் இதயத்தைத் தொடுகிறதா? என்பது மிக முக்கியம் . அந்த விஷயத்தில் தான் உறுதியாக நின்றதாகவும், அவரது வீழ்ச்சியில் அவருக்கு உதவியது தொழுகைதான் என்றும் அவர் மேலும் கூறினார். என் வெற்றிக்கு பிரார்த்தனை பெரிதும் உதவியது. பல பின்னடைவுகளை கடந்து செல்வதற்கும் தொழுகை எனக்கு உதவியது. மற்ற மதங்களும் இதையேதான்
வலியுறுத்துகின்றன.” என்று அவர் மேலும் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் நேசிக்கும் அவரது தாய் கரிமா பேகம் சமீபத்தில் காலமானது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply