சசிகலாவுக்கு புகழாரம் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் இபிஸ்!

561

சென்னை (28 செப் 2020): சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ,கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்

பரபரப்பான இந்த செயற்குழுவில் முதலமைச்சராக்கியது யார்? என ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் எழுதியுள்ளது. தன்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என ஓ.பி.எஸ். பேசியதாகவும் இருவரையுமே முதலமைச்சராக்கியது சசிகலாதான் என ஈபிஎஸ் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் பெரிய தலைகள்!

முதல்வர் வேட்பாளர் கருத்து மோதலை தள்ளிவைத்துவிட்டு கட்சியின் நலன் கருதி செயல்பட சில அமைச்சர்கள் வலியுறுத்தியுதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.