நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் – விமான நிலையத்தில் பரபரப்பு -(வீடியோ இணைப்பு)

1064

பெங்களூரு (03 நவ 2021): நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படபிடிப்பிற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்திருந்த மர்ம நபர் ஆவேசத்துடன் விஜய் சேதுபதி மீது பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார்.

இதில் விஜய் சேதுபதி நிலை தடுமாறினார். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. உடன் பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை காப்பாற்றினர்

தமிழ் நடிகர் என்பதால் அவர் தாக்கப்பட்டாரா… அல்லது வேறு ஏதாவது ஒரு காரணமா என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் இந்த தாக்குதல் குறித்து கருத்து எதுவும் கூற விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.