ஊரடங்கு காலத்தில் பெண் போலீசை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது!

Share this News:

சென்னை (08 ஜூன் 2021): ஊரடங்கு காலத்தில் பெண் போலீசை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் அக்சர் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை பாரிமுனையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது.. ஆட்டோவை அக்சர் அலி என்பவர் ஓட்டி வந்தார்.. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மாற்றுத்திறனாளி என்பதும், மருத்துவ காரணங்களுக்காக வெளியில் செல்வதாகவும் சொன்னார்.. ஆனால், போலி இ-பதிவு பெற்றுக்கொண்டு ஆட்டோவில் சவாரியை ஏற்றி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அங்கு இருந்த, முத்தியால்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தார்… இதை பார்த்ததும் அந்த ஆட்டோ டிரைவருக்கு கோபம் வந்துவிட்டது. அதெப்படி என் ஆட்டோவை பறிமுதல் செய்யலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த பெண் போலீஸ், நான் என் கடமையைதான் செய்தேன்” என்றார்.

இதற்கிடையே பெண் போலீசை கெட்ட கெட்ட வார்த்தைகளிலும், மிகவும் தரைகுறைவாகவும் பேசியபடி அக்சர் அலி, என் ஆட்டோ சாவியை குடு. என்பதாக பெண் போலீசை தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுஇப்படியிருக்க பெண் போலீஸ் கிருத்திகா அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் அக்சர் அலி செய்யப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply