பாஜக ஆதரவுடன் அழகிரி தொடங்கும் தனிக்கட்சி?

321

மதுரை (16 நவ 2020): நேற்று (நவம்பர் 15) மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2021 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லை. எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர். அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

இதைப் படிச்சீங்களா?:  கமல் சீமான் கட்சிகளின் வாக்குகளால் யாருக்கு பாதகம்? - சர்வேயில் இறங்கிய பாஜக!

திமுகவை அதன் தலைமையை எதிர்க்கும் விதமாக பேசிவரும் அழகிரி கட்சி தொடங்கும் முடிவு வரை சென்றிருப்பதால் அவருக்கு பின்னால் பாஜக இருக்கக் கூடும் என்ற விவாதமும் விவாதிக்கப்படுகிறது.