ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து வாக்காளர்களிடம் முறைகேடு செய்யும் பாஜக!

Share this News:

புதுச்சேரி (25 மார்ச் 2021): ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நிதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுக்கள்’ தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கி செய்யப்படும் பிரசாரம் குறித்து மனுதாரர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கிடைத்தன? அந்த செல்போன் எண்களை அரசியல் கட்சி எப்படி பயன்படுத்தலாம்?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


Share this News:

Leave a Reply