சொந்த காருக்கு தீ வைத்துவிட்டு நாடகமாடிய பாஜக நிர்வாகி!

540

சென்னை (16 ஏப் 2022): சென்னை மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48) பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை விற்று நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்ததாக சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரை காவல்நிலைய ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.