ஒரே நகராட்சியில் 22 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக!

புதுக்கோட்டை (23 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 22 வார்டுகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. இதில் 18வது வார்டு வேட்பாளர் மல்லிகா மட்டும் 428 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சியில், 18வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மல்லிகா மட்டுமே வைப்புத் தொகையை தக்க வைத்துள்ளார். மற்ற 22 பா.ஜ.க வேட்பாளர்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

23 வேட்பாளர்களில் 100 ஓட்டுகளுக்கு மேல் பெற்றவர்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். 50 வாக்குகளுக்குள் பெற்ற பாஜக வேட்பாளர்களே அதிகமாக உள்ளனர்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....