பாஜக பெண்களை மதிக்கும் கட்சி – தமிழக பாஜக தலைவர் கருத்து!

சென்னை (21 மெ 2020): பாஜக பெண்களை மதிக்கும் கட்சி என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முருகன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இதுவரை 35 லட்சம் மோடி கிட்வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 1 கோடி பேருக்கு வழங்க தயார் செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில் 1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 21 லட்சம் கோடி ரூபாய்க்கு பல துறைகள் பயன்படும் வகையில் தற்சார்பு திட்டம் உருவாக்கப்பட்டு்ள்ளது.

தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தனிமனித இடைவெளி அவசியம் என்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஒன்றிணைவோம் வா என 1 லட்சம் மனுக்களை பெற்றுள்ளார்.

அதை எடுத்துச் சென்று தலைமை செயலாளர் அறையில் வைத்துவிட்டு, வெளியே வந்து தங்களை மூன்றாம் தர மனிதரை போல நடத்தியதாக தயாநிதி மாறன் பேட்டி கொடுத்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் இவ்வளவு மனுக்களை எப்படி பெற்றார்? என தெரியவில்லை.

மேலும் இது தொடர்பாக தயாநிதி மாறன் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

விவாத நிகழ்ச்சி ஒன்றில் கரு.நாகராஜன் பெண் எம்.பி.யை இழிவுபடுத்தி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக பெண்களை மதிக்கும் ஒரு கட்சி, விவாதங்களில் பங்கேற்கும் போது தனி மனித தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்

இவ்வாறு முருகன் தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு...

சவுதியின் முதல் சொகுசு தீவு திட்டம்!

ரியாத் (06 டிச 2022): சவுதி அரேபியாவின் கனவுத் திட்டமான நியோமில் உள்ள முதல் சொகுசு தீவான சிந்தாலாவின் வளர்ச்சி குறித்து சவுதி பட்டத்து இளவரசர் அறிவித்தார். இத்திட்டத்தின் மாஸ்டர் பிளானும் வெளியிடப்பட்டுள்ளது. சிந்தாலா...

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து...