விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி!

378

விருதுநகர் (20 மார்ச் 2020): விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வின் காரணமா பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது

இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூரில் இருந்து சென்ற தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.