பாஜக அலுவலகம் சூறை – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Share this News:

புதுச்சேரி (20 ஜூன் 2021): புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இன்னமும் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை.

என்ஆர் காங்கிரஸ் 3 அமைச்சர் பதவிகளையும் துணை சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டது. பாஜகவிற்கு 2 அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

தற்போது 2 அமைச்சர் பதவிகளுக்குப் போட்டோபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் குமாரும் சாய் சரவணக்குமாரும் தங்களுக்குத் தான் அமைச்சர் பதவி வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு ஜான்குமார் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். திடீரென அலுவலகம் முன்பிருந்த பெயர்ப் பலகையைக் கிழித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இச்சூழலில் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறுதல், தொற்றுநோயைப் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply