சென்னையில் அனைத்து கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி!

சென்னை (06 மே 2020): சென்னையில் நாளை அனைத்து தனிக் கடைகளையும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்க, இந்தியாவில், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவின், ‘ஹாட் ஸ்பாட்’ ஆக, சென்னை மாறியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, முழு வீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்லுாரி மற்றும் வளாகங்களில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக, மற்ற மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நாளை அனைத்து தனிக்கடைகளும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால் திறக்க அனுமதியில்லை!”