இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக லடாக்கில் பாலம் கட்டும் சீனா!

338

லடாக் (04 ஜன 2022): லடாக்கில் அத்து மீறும் சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் மீது பாலம் கட்டும் செயற்கைக்கோள் காட்சி. புவி-உளவுத்துறை நிபுணரான டேமியன் சைமன் மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி பாங்கோங் ஏரியின் இருபுறங்களையும் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பாலம் அங்கு கட்டப்படுவதால், அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை நடந்தால், அதிவேகப் படைகளையும், ஆயுதங்களையும் குவிக்க சீனாவுக்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி.

டேமியன் சைமன் ட்விட்டரில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் மேற்குக் கரைகளை இணைக்கும் வகையில் பாலம் முன்னேறி வருவதாக ட்வீட்டில் டேமியன் தெரிவித்துள்ளார். லடாக் பிராந்தியத்தில் இலகுவாக இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு வசதியாக போக்குவரத்தை வலுப்படுத்துவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

2020ல், லடாக் பகுதியில் இந்தியா-சீனா மோதல் தீவிரமடைந்தது. கால்வன் நதிக்கரையில் நடந்த கடும் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். நான்கு சீன ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இதற்குள் இந்திய ராணுவம் பாங்காங்கின் தெற்கு கடற்கரையில் உள்ள கைலாஷ் பகுதியின் உச்சியை அடைந்தது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பிலிருந்தும் சுமார் 50,000 துருப்புக்கள் கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர்.