கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் ரத்து – முதல்வர் அதிரடிஉத்தரவு!

Share this News:

சென்னை (26 ஆக 2020): கல்லூரிகளில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸானதாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. அன்பழகன் உள்ளிட்டவர்களுடன் எடப்பாடி மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில் கல்லூரி இறுதி தேர்வு நடைபெறும். இதுதவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படும். இறுதியாண்டில் இறுதி தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்குமான அரியர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கட்டணம் கட்டி இருந்தாலும் ரத்து செய்யப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்தி இருக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும். ” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply