பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அக்கட்சியின் நிர்வாகி மீஞ்சூர் சலீம் கபடி லீக் போட்டிகளில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. அண்ணாமலைக்கு மிக நெருக்கமான இவர், பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டும் அமர் பிரசாத் ரெட்டி மீது உண்டு.

இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் கிராமங்களில் ஊடுருவ முடியும் என்பது பாஜகவின் கணக்கு. இந்த கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமர் பிரசாத் ரெட்டியுடன் இணைந்து செய்து வந்தனர் பாலாஜி தங்கவேல் உள்ளிட்டோர். ஆனால் அமர் பிரசாத் ரெட்டியின் நடவடிக்கையில் உடன்படாத பாலாஜி தங்கவேல் பாஜகவின் இளைஞர் விளையாட்டு பிரிவு துணை தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது இப்படியிருக்க கபடி லீக் போட்டிகள் மூலம் அமர் பிரசாத் ரெட்டி பணத்தை சுருட்டி விட்டார் என பாஜக ஆதரவாளர் மீஞ்சூர் சலீம் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமது ட்விட்டர் பக்கத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் மீஞ்சூர் சலீம் முன்வைத்தும் வருகிறார்.

ஹாட் நியூஸ்:

அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வழங்கிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை...

சவூதியில் இனி டிஜிட்டல் இக்காமாவை பயன்படுத்தும் வசதி!

ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம்....

மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப்...