தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார்!

291

சென்னை (27 ஜன 2022): சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த டிசம்பரில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டுமென்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு இது குறித்து புகார் அளித்துள்ளார்.