மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 மற்றும் மமக 2 இடங்களை பெற்றுள்ளன.

இதற்கிடையே கடந்த முட்டை 41 இடங்களை பெட்ற காங்கிரசுக்கு இம்முறை பாதி இடங்களே வழங்கப்படுவதால் அதிருப்தியில் உள்ள காங்கிரசை மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு அழைத்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணி அமையலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: