இலங்கை : விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நிராகரித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பொதுமன்னிப்பில் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று கோரியும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட போவதாக இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா : மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் நகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க-வும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.

பீகார் : பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதை பார்த்து பிரதமர் மோடி பதற்றம் அடைந்து உள்ளதாகவும், அவருக்கு சாதகமாக எதுவும் நடைபெறாது என்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். மேலும் "நடைபெறுகின்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதளக் கூட்டணிக்கு யாரும் சவால் கிடையாது. ஒப்புக்குத்தான் தேர்தல் நடைபெறுகிறது" என்றும் கூறியுள்ளார்.

இலங்கை: வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அரசியல் பிரமுகர்களின் விபரம் பற்றிய தகவல்களை கொடுப்பவர்களுக்கு மொத்த வைப்புப் பணத்தில் மூன்று சதவிகிதத்தை சன்மானமாக வழங்குவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சென்னை : "ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகளை ஏற்றிச் செல்லக்கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி ஆம்னி பேருந்துகளில் வியாபாரிகளும், சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்களும் பட்டாசுகளை ஏற்றிச் செல்ல அனுமதித்தால் சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போக்குவரத்து ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துபாய் : உலகிலேயே முதல் 5G நெட்வொர்க் சேவை அமீரகத்தில் தொடங்கப்பட இருப்பதாக எடிசலாட் ( Etisalat ) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஹமத் ஜூல்ஃபர் அறிவித்துள்ளார். மேலும் இந்த சேவை எக்ஸ்போ 2020 தொடங்கும் நேரத்தில் பயன்பாட்டுக்கு வரும் எனவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விமான நிலைய ஆணையரகத்தின் செயலாளர் சௌபே, மூன்று ஆண்டுகளில் சர்வதேச தரத்தில் விமான நிலைய கட்டிடம் கட்டப்படும் என்றும், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனுடைய பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பை : ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் வாராவாரம் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களில் முதல் 10 இடங்கள் பிடித்தவர்கள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி கடந்த 41-வது வாரத்தின் முடிவில், இந்திய அளவில் சன் தொலைக்காட்சி நிறுவனம் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை: இந்திய பிசிசி மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பிசிசி அணி தென் ஆப்ரிக்க அணியினை வென்றது.

சென்னை(21 அக். 2015): வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில், பெருங்குடி அருகே செல்லும் போது திடீரென ஒரு பெட்டியில் தீப்பிடித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...