சென்னை (08/12/15): அடுத்த 24 மணி நேரத்திற்கு  கடலோர மாவட்டங்களுக்கு  கனமழை இருக்ககூடும் என்று வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.

இலங்கை : இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்து இரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் : சேலத்தில் காலைக்கதிர் என்ற பத்திரிகையின் பெயரை சொல்லி வணிகர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போலி நிருபர்களை செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை : மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை திடீரென அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

திருச்சியில் நில வேம்பு கசாயம் குடித்த 12 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். டிசம்பர் 15 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி : தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.939.63 மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை (23 நவம்பர் 2015) : "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...