சென்னையில் முக்கிய நபர்களை தாக்கும் கொரோனா – தொடர் அதிர்ச்சி!

சென்னை (08 மே 2020): சென்னையில் முதன்மை பணியாளர்களை கொரோனா தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம், சென்னைக்கு வெளியில் இருந்த மின்வாரியத்துறை இஞ்ஜினியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்துறையில் 7 ஊழியர்களுக்கும், 3 ஒப்பந்த பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் கொரோனா பாதிப்பு பகுதிகளில் பணிக்கு செல்லாமல், பராமரிப்பு பணிகளையே மேற்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் தற்காலிக ஏற்பாடாக, அந்த அலுவலகம் அண்ணா சாலை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

சென்னை (07 டிச 2022): அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில் மாவட்டச் செயலாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில்...

சவூதியில் வாட் (வரி) மற்றும் வெளிநாட்டவர்களுக்கான லெவியில் மாற்றமில்லை!

ரியாத் (09 டிச 2022): சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. "கோவிட் காலத்தில், உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படாது. தற்போதைக்கு தற்போதைய முறை தொடரும்" என்று...

முஸ்லிம் பெண்கள் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (09 டிச 2022): முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி செல்லுபடியாகும் என பல்வேறு...