கொரோனாவிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை எடுக்கும் முன்மாதிரி கிராமம்!

Share this News:

தஞ்சாவூர் (18 மார்ச் 2020): அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செந்தலை பட்டினம் கிராமத்து மக்கள், தங்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று திரும்பி வரும் கிராம மக்கள் அனைவரும் ஊரின் எல்லையில் கைகளை சுத்தம் செய்து விட்டு வர வேண்டும் என்று எல்லையில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதன் அருகில் சோப்பு, கிருமி நாசினி மருந்துகள் ஆகியவற்றை வைத்துள்ளனர்.

மேலும் மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்த கிராமம்பொதுமக்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்னர் தங்களது கைகளை நன்கு கழுவி விட்டு வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களை கொரோனா வைரஸ் நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என இக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ரஹமத்துல்லா மற்றும் மன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சேர்மன் இத்ரீஸ் இந்த கிராம மக்களை பாராட்டி அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.


Share this News:

Leave a Reply