ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது – நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை (28 அக் 2021): மமக எம்.எல்.ஏக்களான ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது என்ற மனு மீது விசாரனையில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 61, பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் முறையே பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் தி.மு.க.,சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

மனித நேய மக்கள் கட்சியின் விதிமுறை 6வது பிரிவின்படி வேறு கட்சி உறுப்பினர்கள், ம.ம.க.,வில் உறுப்பினராக முடியாது. 23வது பிரிவின்படி, ம.ம.க., தனி சின்னத்தில் போட்டியிடலாமே தவிர மற்ற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என உள்ளது.

கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல்சமது ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் தங்களை தி.மு.க., உறுப்பினர்கள் என தெரிவித்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். எனவே, அவர்கள் மனித நேய மக்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தொடர கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு இன்று (அக்.28ம் தேதி) விசாரணைக்கு வந்த போது, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை டிச.,1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...