தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி – முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு!

380

சென்னை (11 ஜன 2021): தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் மதுரையில் அல்லது சென்னையில் தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  அச்சுறுத்தும் புதுவகை கொரோனா வைரஸ்!

இவ்வாறு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார்.