விசிகவை தோற்கடிக்க உதவியதா திமுக?

தாம்பரம் (23 பிப் 2022): தாம்பரம் பகுதியில் கூட்டணி கட்சி விசிக வேட்பாளரை தோற்கடிக்க சுயேட்சைக்கு திமுக எம்.எல்.ஏ உதவியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டு கூட்டணிக் கட்சியான விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த பெரியநாயகம் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக நின்றார். இவர், தான் வாக்குகோரும் பிரசுரங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர வேண்டும் என்று பதிவிட்டு வாக்கு சேகரித்தார்.

ஆனால் ”சுயேச்சையாகப் போட்டியிட்ட பெரியநாயகம் திமுகவிலிருந்து தேர்தலுக்கு முன்பு விலக்கப்பட்டார். இருந்தும் அவர் நேற்று வெற்றி பெற்றுள்ளார். பெரியநாயகம் வெற்றி பெற திமுக எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர். ராஜா மறைமுகமாக உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரச்சாரத்தின் போது பெரிய நாயகத்திற்கான அனைத்து செலவுகளையும் எஸ்.ஆர். ராஜா ஏற்றுக்கொண்டதாகவும் அப்போதே பேச்சுகள் எழுந்தன. இன்று வெற்றி பெற்றதும் எஸ்.ஆர். ராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றது அதனை உறுதி செய்துள்ளார் என்பதுபோலவே எண்ணத் தோன்றுகிறது” என அப்பகுதி விசிகவினர் தெரிவித்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

வரும் 8 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல்...

ப்ளூடூத் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை!

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல்...

சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு...