பாஜகவுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு?

1310

புதுடெல்லி (28 நவ 2021): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக காங்கிரசிடமிருந்து விலகி இருக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

நாளை நடக்க உள்ள தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்றுநடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தி.மு.க. பங்கேற்க உள்ளது.

நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் விவசாய சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, முந்தைய கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்ட தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

ஆனால், தமிழகம் சார்ந்த பிரச்னைகளை இந்தக் கூட்டத் தொடரில் முன்வைத்து, மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சி செய்யும்படி தம் கட்சி எம்.பி.க்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதனால் மற்ற விஷயங்களில் பிரச்சனைகளை கிளப்பாமல் எதிர் கட்சிகளிடமிருந்து விலகி இருக்க திமுக முடிவு செய்துள்ளது.