“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்!

358
Durai Murugan
Durai Murugan

சென்னை (07 ஆகஸ்ட், 2020): திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்திலும் கோபத்திலும் தி.மு.க.-வில் கலகத்தை உருவாக்க நான் முனைவது போல் தினமலர் நாளிதழில் வெளியான செய்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் உருவாக்க நான் முனைவது போல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்தியாக தினமலர் (7.08.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.

DuraiMurugan
DuraiMurugan

இது என்மீது களங்கத்தை கற்பிக்கின்ற வகையிலான செய்தியாக வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
‘தினமலரின் தில்லுமுல்லு எங்களிடம் எடுபடாது’ : ஓரமாய் போய் விளையாட அறிவுறுத்திய துரைமுருகன்!என் வரலாறு தினமலருக்கு தெரியாது போலும். எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல இந்த துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953ம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன் நான். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது தினமலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது,அமைச்சர்களுக்கு கவரி வீசுவது,அதனால் ஆதாயம் பெறும் தினமலருக்கு ஒரு இலட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.
சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். தினமலரின் தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.