அமித்ஷாவின் அதிரடி திட்டம் – அப்செட்டில் எடப்பாடி!

சென்னை (02 மார்ச் 2021): அதிமுகவுடன் சசிகலா இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் இதனால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

பாஜகவுக்கு 22 அல்லது 23 தொகுதிக்கு மேல் கொடுக்க அதிமுக விரும்பவில்லை ஆனால் 30 க்கு மேல் பாஜக எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதற்காக அமித்சாவே நேரில் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்

மேலும் திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் அதிமுகவுடன் சசிகலாவையும் (சசி+தினகரன்) இணைத்துக் கொள்ளுங்கள் என அமித்ஷா விரும்புவதாகவும் இதனால் எடப்பாடி அப்செட்டாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதை குறித்து பாஜாகவுக்கு கவலையில்லை தனது கட்சி சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள் என்பதாக பாஜக தரப்பு விரும்புகிறது. எனினும் விரைவில் கூட்டணி குறித்த முடிவுகள் வெளியாகிவிடும்.

ஹாட் நியூஸ்: