ரஜினிக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றது ஏன்?: திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்!

சென்னை (24 ஜன 2020): நடிகர் ரஜினி மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றது ஏன் என்று திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது.

ரஜினியின் பேச்சை எதிர்த்து நீதிமன்றத்தில் பல மனுக்கள் அளிக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் திராவிடர் விடுதலைக் கழகமும் மனு அளித்திருந்தது.

இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக திராவிடர் விடுதலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினி மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒருவார அவகாசம் அளித்தே மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு புகார்கள் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நடவடிக்கை கோர் நீதிமன்றத்தை அணுகுவோம்.

பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினியின் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும்...

நுங்கு, குலோப் ஜாமுன் – சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை?

சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...

55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு...