டாஸ்மாக் – செம்மையாக ஏமாந்த குடிகாரர்கள்!

Share this News:

சென்னை (15 மே 2020): டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று குடிகாரர்களின் அனைத்து தகவல்களையும் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

இதற்கிடையே , டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று புதிதாக இயங்கிவருகிகிறது. ஆன்லைனில் மதுபானம் டெலிவரி என்று அதில் குறிப்பிட்டுள்ள நிலையில், பயனர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.

மது வகைகளுடன் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன.

போலி இணையதளம் என்று தெரியாத நிலையில், பலரும் தங்களது முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தனர். நள்ளிரவு முதல் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.


Share this News: