புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பலி!

புதுச்சேரி (05 நவ 2021): புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கலைநேசன் (37) என்பவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இரண்டு பெரிய பட்டாசு பைகளை வாங்கி. பைக்கில் கொண்டு சென்றுள்ளார். ஆனால் எதிர் பாராத விதமாக பட்டாசு பைக்கிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் கலைநேசனும், அவரது மகன் பிரதீஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தானர். மோட்டார் சைக்கிளின் வெப்பம் காரணமாக பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

பட்டாசு வெடிப்பதில் அதிக கவனம் தேவை என பல சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும் அதனை மக்கள் செவி கொடுத்து கேட்காததால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: