மாதவரம் ரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

மாதவரம் (29 பிப் 2020): மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் வெளியாகக் கூடிய புகை மற்றும் வெப்பத்தால் தீயணைப்பு வீரர்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர வேறு பொதுமக்களும் எதிர்பாராமல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அங்கு அவசர சிகிச்சைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருவதால், இன்னும் பல மணி நேரம் போராட்டம் தொடரும் என்று தான் தெரிகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

டெல்லியில் முஸ்லிம் வாக்குகளை இழந்த ஆம் ஆத்மி கட்சி!

புதுடெல்லி (08 டிச 2022): டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றாலும் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளை இழந்துள்ளது 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி...

ஜெயலலிதா இறந்த நாள் நல்ல நாளா? எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை (06 டிச 2022): ஜெயலலிதா இறந்த நாளான நேற்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனீஆக ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி...

பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அக்கட்சியின் நிர்வாகி மீஞ்சூர் சலீம் கபடி லீக் போட்டிகளில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக...