சென்னையில் இதுவரை ஐந்து கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!

351

சென்னை (10 ஜூன் 2020): சென்னையில் ஏற்கனவே நான்கு கொரோனா நோயாளிகள் தப்பியோடிய நிலையில் தண்டையார் பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7-ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கிருந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் தப்பியோடியுள்ளார். ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிய நிலையில் இன்னொரு கொரோனா நோயாளி தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.