கார் விபத்தில் முன்னாள் அழகி உட்பட மூவர் பலி?

932

திருவனந்தபுரம் (13 நவ 2021): கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் முன்னாள் கேரள அழகி அன்சி கபீர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டிரைவர் அப்துல் ரஹ்மான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விருந்து முடிந்ததும்அன்சி கபீர் சென்ற காரை வேறொரு கார் பிந்தொடர்ந்ததாகவும் இதில் வேகம் அதிகரித்து விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்

விபத்து தொடர்பான சில சிசிடிவி காட்சிகளை பொலிசார் பெற்றுள்ளனர். அப்போது ஒரு கார் பின்தொடர்ந்து செல்லும் காட்சிகள் வெளியாகின. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள அழகி உட்பட 3 பேரின் மரணம் தற்செயலான மரணம் என்பதில் போலீசாருக்கு சந்தேகம் இல்லை. ஆனால் இதற்கான காரணங்கள்தான் இப்போது போலீஸ் விசாரணையின் முக்கியப் பொருளாக இருக்கிறது.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

இதற்கிடையில் அப்துல் ரஹ்மான் கூறியிருப்பது வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம். இதற்கிடையில், விபத்தில் இறப்பதற்கு முன், முன்னாள் அழகி கேரள அழகி அன்சி கபீர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட டிஜே பார்ட்டியின் காட்சிகளை போலீசார் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.