தமிழக பாஜக முன்னாள் தலைவர் மரணம்!

சேலம் (02 ஜூன் 2020): தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (92) உடல் நலக்குறைவால் காலமானார்.

கே.என் லட்சுமணன். 2 முறை தமிழக பாஜ தலைவராக இருந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு காலமானார்.

இதைப் படிச்சீங்களா?:  திசைமாறும் திருமாவளவன் - கலக்கத்தில் திமுக!

கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.