சென்னையில் இலவச வை-ஃபை WI-FI !

சென்னை (17 ஆக 2021): சென்னையில் 46 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI தொடர்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் தெரிந்துகொள்ளலாம். WI-FI வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்களில் கூடுதல் வசதிகளும் இடம்பற்றுள்ளது.

WI-FI வசதியைப் பெறுவதற்கு மொபைல் எண்ணைப் பதிவு செய்து ஒடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலலாம்.

பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளது. அதேபோல் மழைக்காலங்களில் மழைபெய்யும் அளவைத் தெரிந்துகொள்ளலாம். வெள்ளப்பெருக்கின் பொழுது குறிப்பிட்ட பகுதியில் தேங்கும் நீரின் அளவையும் தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ் இந்த இலவச வை-ஃபை வசதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: