சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு!

சென்னை (15 ஜூன் 2020): சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: