தாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் – நீட் தேர்வு கொடுமையின் உச்சம்!

Share this News:

பாளையங்கோட்டை (14 செப் 2020): நீட் தேர்வு எழுத வந்த பெண் தாலியை கழட்டிவிட்டு தேர்வெழுதிய கொடுமை பாளையங்கோட்டையில் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன புது மணப்பெண் ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

தேர்வு எழுதுவதற்காக அந்த பெண் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு வந்தார். அப்போது தேர்வு மையத்துக்குள் தாலி எதுவும் அணிந்திருக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு கட்டளை இடப்பட்டது.

இதையடுத்து அந்த புதுப்பெண் தனது தலையில் இருந்த பூக்களை ஹேர்பின்னுடன் கழற்றி உறவினர்களிடம் கொடுத்தார். தொடர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி, காலில் அணிந்து இருந்த மெட்டி உள்ளிட்ட நகைகளையும் கழற்றி உறவினர்களிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார். மாலையில் தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் அவர் மீண்டும் தனது தாலி, மெட்டி உள்ளிட்ட நகைகளை அணிந்து கொண்டார்.

இந்து மதப் பெண்களின் புனிதமான தாலியையே கழட்டி விட்டு தேர்வெழுதச் சொன்ன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply