கொரோனா வைரஸ் – தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னை (13 மார்ச் 2020): தமிழகத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது ரத்தப் பரிசோதனையில், கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பரவவில்லை என்றும், முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கரோனா பரவி வரும் கேரளாவுக்கு தமிழக மக்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஹாட் நியூஸ்: