நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

நாகப்பட்டினம் (27 மே 2020): நாகை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகியுள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னையை மிக அதிக அளவில் பாதித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

அவர்களில் பலர் படிப்படியாக குணமாகி வீடு திரும்பினர். அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், ஏற்கனவே 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், மீதமிருந்த 3 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் நாகை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

ஹாட் நியூஸ்:

ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13...

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு...