ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share this News:

சென்னை (27 ஜூலை 2020): ஓபிசியினருக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்காததை எதிர்த்து எதிர் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில் அவர்கள் இன்று தீர்ப்பை வாசித்தனர். அப்போது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது என்று கூறினர்.

மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். 30 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும்.

மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Share this News:

Leave a Reply