ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா? – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

362

சென்னை (30 மார்ச் 2021): ஊரடங்கு அறிவிப்பு வெளியாகலாம் என்று பரவும் தகவல் குறித்து காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும்.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

வரக்கூடிய நாட்களில் சில கட்டுபாடுகள் இருக்கும். முழு ஊரடங்கு வரப்போகிறது, இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்கிற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.” என கூறினார்.