இந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்!

Share this News:

அரியலூர் (23 செப் 2020): இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கு மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 72) கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக அந்த வங்கிக்கு சென்றார். அங்கு அவர் கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை சந்தித்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காட்டி கடன் வழங்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது கிளை மேலாளர் இந்தியில் பேசியதோடு, பாலசுப்பிரமணியனுக்கு இந்தி தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பாலசுப்பிரமணியன் தனக்கு இந்தி தெரியாது என கூறி உள்ளார். உடனே வங்கி மேலாளர் கடன் வழங்க மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் பாலசுப்பிரமணியன், மான நஷ்டஈடு கேட்டு வங்கி கிளை மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை திருச்சிக்கு இடமாற்றம் செய்து திருச்சி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply