பிப்ரவரி 19 ல் சட்டமன்ற முற்றுகை – ஜவாஹிருல்லா அறிவிப்பு!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று மாலை சந்தித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பிப்.19ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரும் என நம்புகிறோம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவித்தால் இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை கைவிடுவோம். குடியுரிமை சட்டத் திருத்தம் என்.ஆர்.பி, என்.ஆர்.சிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும்.” என்றார்.

ஹாட் நியூஸ்:

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், "நில அதிர்வு எதுவும்...

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 16 பேர் பலி!

அலெப்போ (23 ஜன 2023): சிரியாவின் வடக்கு நகரமான அலப்போ நகரில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் 30 பேர் வசித்து வருகின்றனர். நேற்று திடீரென இந்த கட்டிடம் சீட்டு கட்டு போல...

ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி...